நடிகர் விக்ரமின் நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போன துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சூர்யா – கௌதம் இடையே ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாக இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டார்.
விக்ரமின் கால்ஷீட் கிடைத்தவுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துடன் கௌதம் மேனனுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால், 90% படப்பிடிப்புகள் முடிந்திருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இத்தனை தொடர்ந்து, பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக இயக்குநர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை முழுமையாக முடித்து தற்போது ரிலீசுக்கும் ரெடியாகி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குநர் கௌதம் பேசியபோது,
துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த நடிகர் விக்ரம் தன்னை மிகவும் பாராட்டியதாக கூறினார்.
மேலும் துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸில் துருவ நட்சத்திரம் இரண்டாம் பாகத்திற்கான லீட் இருக்கும்.
முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே, ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளதாக இயக்குநர் கௌதம் கூறியுள்ளார்.
ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் L C U விற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது கௌதமின் இந்த யுனிவர்ஸ் குறித்த தகவல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள் …
– கார்த்திக் ராஜா