”கள்ளச்சாராய மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்” : பா.ரஞ்சித்

Published On:

| By christopher

"Government's negligence is the cause of kallakurichi illicit liquor death" : Pa. Ranjith

”கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணம்” என இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ நெருங்கியுள்ளது. மேலும் 90க்கும் மேற்பட்டோர் சேலம், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!” இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கள்ளச்சாராய மரணம் : ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவு!

”ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” : எடப்பாடி ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share