நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன் என பலரும் நடித்துள்ளனர். முதன்முறையாக ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
படம் நாளை (அக்டோபர் 10 ) ரிலீஸாகவிருக்கிறது. ப்ரீ புக்கிங்கிலேயே சக்கை போடு போட்டுள்ளது ‘வேட்டையன்’. இந்த ரெஸ்பான்ஸை பார்த்து படக்குழுவினரும் சந்தோஷமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வேட்டையன் படத்தை பார்ப்பதற்காக நாளை ஒரு அலுவலகம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த HYSAS என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வேட்டையன் படத்துக்கான டிக்கெட்டையும் கொடுத்து விடுமுறையும் அளித்துள்ளது. சில தனியார் நிறுவனங்களும் வேட்டையன் படத்துக்காக விடுமுறையை அறிவித்துள்ளன.
வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர். அது போலவே, வேட்டையன் படத்திற்கு காலை 9 மணி காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!
சாம்சங் தொழிலாளர்கள் கைது : நீதிமன்றத்தில் அவசர முறையீடு!