அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்

Published On:

| By Kavi


தமிழக அரசு சார்பில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, சீரியலுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத உறவாகவே 1967 முதல் இன்று வரை இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் வசனகர்த்தாக்களான மறைந்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திரை நட்சத்திரங்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.

அதனால் தமிழ் சினிமா, ஆட்சியாளர்களின் செல்லக் குழந்தையாகவே கவனிக்கப்பட்டு வந்தது.

தொடக்கக்காலத்தில் திரைப்பட கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வருகைக்கு பின் சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும்,

வருடா வருடம் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டு வந்தது

2009-ம் ஆண்டிலிருந்து சிறந்த கலைஞர்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு விருது அறிவிக்கப்படவில்லை, அதற்கான காரணத்தையும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் 13 ஆண்டு காலமாக அறிவிக்கப்படாமல் இருந்த திரைப்படம், சின்னத்திரைக்கான விருதுகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியே 2015-ம் ஆண்டுதான் துவங்கியது.

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களை 2017-ம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டது.

அறிவித்த பின்பும் விருதுகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலைமாமணி விருதுகள் திடீர் என மொத்தமாக வழங்கப்பட்டன.

அடுத்தபடியாக திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தயாராகி வந்த சூழலில் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

அதனால் திரைப்பட விருதுவிழா நடைபெறாமல் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு பின்பு 2015ல் தயாரிக்கப்பட்ட திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

வரும் செப்டம்பர் 4-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் விருது பெறும் கலைஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விருது பெறும் கலைஞர்களின் பட்டியலில் முக்கியமானவை:

சிறந்த திரைப்படத்திற்கான விருது பெறும் படங்கள்

goverment flim award

2009- பசங்க
2010- மைனா
2011- வாகை சூடவா
2012-வழக்கு எண் 18/9
2013- இராமானுஜன்
2014- குற்றம் கடிதல்(2014)

சிறந்த நடிகர் நடிகைகளுக்கான விருது பெறுபவர்கள்

goverment flim award

2009-கரண், பத்மப்ரியா
2010-விக்ரம், அமலாபால்
2011-விமல், இனியா
2012-ஜீவா, லட்சுமிமேனன்
2013-ஆர்யா, நயன்தாரா
2014- சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இயக்குநர்களுக்கான விருதுபெறுபவர்கள்

goverment flim award


2009.-வசந்தபாலன்
2010-பிரபுசாலமன்
2011-ஏ.எல்.விஜய்
2012-பாலாஜி சக்திவேல்
2013-ராம்
2014- ராகவன்

சிறந்த சீரியல்கள்

goverment flim award


2009-திருமதி செல்வம்
2010-உறவுக்கு கைக்கொடுப்போம்
2011-சாந்தி நிலையம்
2012-இரு மலர்கள்
2013-வாணி ராணி

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel