ஒத்த ஓட்டு முத்தையா என்ற புதிய படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ளார்.ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். goundamani speech otha ottu
கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்க யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ராயன் என பெரிய காமெடி நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (பிப்ரவரி 4) நடந்தது. நிகழ்ச்சியில் கவுண்டமணி பேசியதாவது, “ஒத்த ஓட்டு முத்தையா படம் குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம். இந்த படத்தை அனைவரும் வந்து பாருங்க. இந்த ஒத்த ஓட்டு முத்தயாவை வெற்றி முத்தயாவாக மாற்றுங்கள். இது உங்களுடைய கடமை என்றே சொல்வேன். அது உங்களுடைய விருப்பம். இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்றார்.
“அப்போது, கேமரா மேன் பெயரை சொல்ல மறந்துவிட்டேன் சாரி” என்று கூறியபடி மீண்டும் கவுண்டமணி பேசினார். “இந்த படத்தின் கேமரா மேன் காத்தவராயன். சிறப்பான முறையில் அனைவரும் வெளிச்சமாக தெரியும் வகையில் படம் எடுத்துள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
நீண்ட காலத்துக்கு பிறகு , கவுண்டமணி நடித்துள்ள படம் வெளி வருவதால் அதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். goundamani speech otha ottu