மறைந்த நடிகையின் ஸ்ரீதேவின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமான முறையில் கூகுள் கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜிஆர், சிவாஜி ஆகியோரும்நடிக்க தொடங்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருடனும் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தவர். ஒரு கட்டத்தில் இந்தி சினிமாவிற்கு சென்றவர் மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்தியத் திரையுலகத்தின் கனவுக்கன்னியாக கோலோச்சினார்.
இன்று அவரது 6oவது பிறந்தநாள். அவரை கவுரவிக்கும் விதத்தில் ‘கூகுள்’ இணையதளத்தில் இன்று ‘ஸ்ரீதேவியின் டூடுள்’ வெளியிடப்பட்டுள்ளது.
“எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்குமிக்க பாலிவுட் நடிகைகளில் ஒருவர் என பரவலாகக் கருதப்படும் இந்திய நடிகை ஸ்ரீதேவியை இன்றைய டூடுள் கொண்டாடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது கூகுள்.
இராமானுஜம்