நடிகை மீதா ரகுநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2022 இல் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். தொடர்ந்து தனது 2-வது படமான ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுடன் இணைந்து நடித்திருந்தார்.
இரண்டாவது படம் தான் என்றாலும் ‘குட் நைட்’ படத்தில் மீதாவின் கதாபாத்திரமும், அவர் தொடர்பான காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.
Kanguva டீசர் ரெடி… Sizzle இதற்கான அர்த்தம் என்ன?
மணிகண்டன்-மீதா ரகுநாத் இருவருக்கும் இப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தினை அளித்தது. 2-வது படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த மீதா ரகுநாத் தற்போது தனது திருமண வாழ்வை தொடங்கியுள்ளார்.
கடந்த 2௦23-ம் ஆண்டு ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருந்த நிலையில், நேற்று (மார்ச் 17) மேதா ரகுநாத்துக்கு பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற்றது. அவரின் சொந்த ஊரான ஊட்டியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Bastar The Naxal Story : படம் எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம்
இந்தநிலையில் அவர் தன்னுடைய திருமண புகைப்படங்களை, ”எனது மொத்த இதயம்” என கேப்ஷன் கொடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மணமக்கள் இருவரையும் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர். தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு பிறகு மீதா நடிப்பினை தொடர்வாரா? இல்லை இரண்டு படத்தோடு முடித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை. என்றாலும் விரைவில் இதுகுறித்து மீதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மாணவர் நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6 மாநில உள்துறை செயலாளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!