golden globes awards nolan oppenheimer
ஆஸ்கார் விருதுக்கு பிறகு மிக உயர்ந்த விருதாக பார்க்கப்படுவது கோல்டன் குளோப் விருது தான்.
இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சியில் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த விருது விழாவில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த டிராமா படத்துக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
மேலும் “சிறந்த இயக்குநர்” விருதும் கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் விருதினை நோலன் பெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த நடிகர், துணை நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒப்பன்ஹெய்மர் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படங்களின் பட்டியல் இதோ..
*சிறந்த திரைப்படம் (டிராமா) – ஒப்பன்ஹெய்மர்
* சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த நடிகை (டிராமா) – லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)
* சிறந்த நடிகர் (டிராமா) – சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) – புவர் திங்ஸ்
* சிறந்த திரைக்கதை – அனாடமி ஆஃப் எ ஃபால்
* சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
* சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) – பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
*சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
* சிறந்த துணை நடிகை – டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
* சிறந்த டிவி தொடர் (டிராமா) – சக்ஸசன்
* சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) – தி பியர்
* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) – லுட்விக் யோரன்ஸோன் ஒப்பன்ஹெய்மர்
* சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) – அனாடமி ஆஃப் எ ஃபால்
* சிறந்த பாடல் – ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி – பில்லீ எலீஷ்)
* சிறந்த அனிமேஷன் படம் – ’தி பாய் அண்ட் தி ஹெரோன்
*சிறந்த வசூல் சாதனை படம் – பார்பி
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
TNGIM 2024 : “ஒரு வீடியோ பண்றதுக்கு ரூ.3 லட்சம் செலவாகும்” – வில்லேஜ் குக்கிங் சேனல் பேட்டி!
மகேஷ் பாபுவின் மாஸ் மசாலா: குண்டூர் காரம் ட்ரெய்லர் எப்படி?
golden globes awards nolan oppenheimer