ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
பாகுபலி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இப்படத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவகன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர்.
தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.
சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விருதை இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி பெற்றுக்கொண்டார். இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: திமுக ஆட்சியை கலைக்க சதி? ஸ்டாலின் அடுத்த அதிரடி மூவ்!
வாரிசு- துணிவு ரிலீஸ்: பேனர்கள் கிழிப்பு! மண்டை உடைப்பு!