நயன் தாரா, பிருத்விராஜ் நடித்து செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் ‘கோல்டு’ மலையாள திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும் சேட்டிலைட் உரிமையை சூர்யா டிவியும் பெற்றுள்ளன.
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம். மலையாளம் தாண்டி பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்கு பின் பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன் சுமார் 7 ஆண்டுகள் கழித்து ‘கோல்டு’ படத்தை இயக்கியுள்ளார்.
பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின் பல ஆண்டுகள் கழித்து கோல்டு வருவதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனே மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, அஜ்மல் அமீர், செம்பன் வினோத் என சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரேமம் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஓணம் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும் சேட்டிலைட் உரிமையை சூர்யா டிவியும் பெற்றுள்ளது.
- க.சீனிவாசன்
ஸ்பெயினில் விக்னேஷ்- நயன்: வைரலாகும் டிஜே பார்ட்டி வீடியோ!