தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோன்,நயன்தாரா, விஜய்சேதுபதி,சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை அனிருத்.
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இது இந்திப்படம் என்றாலும் அட்லீ இயக்கம், விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட தமிழின் முன்னணிக் கலைஞர்கள் இடம்பெற்றிருப்பதால் தமிழ்நாட்டில் இந்தப்படத்துக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை வாங்குவதற்கு தமிழ்நாட்டில் இருந்து பலரும் முயற்சித்தனர்.
தயாரிப்பு கூறிய விலையை கேட்டு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. தமிழ் கலைஞர்கள் நிறைந்த படமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மொழி மாற்று படமாகவே இருக்கும்.
தமிழ் படத்திற்கு இணையாக விலை கொடுத்து வாங்கினால் வசூல் ஆவது சிரமம் என விநியோகஸ்தர்கள் கூறி வந்த நிலையில் ஜவான் படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோகுலம் நிறுவனம் 22 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சுமார் 50 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனால் முதலீட்டு தொகையான 22 கோடி ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் வசூல் ஆகும் தொகைதான் லாபமாகும்.
ஜவான் படத்தின் கேரள, தமிழ்நாடு விநியோக உரிமைக்கு கோகுலம் நிறுவனம் கொடுத்திருக்கும் விலை கேட்டு தமிழ்நாடு, கேரளமாநில விநியோகஸ்தர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
இராமானுஜம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக: உண்ணா விரதமா? உண்ணும் விரதமா?