Vijay reunites with Ilayaraja after 23 years

GOAT: 23 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவுடன் இணையும் விஜய்

சினிமா

Vijay reunites with Ilayaraja after 23 years

நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் விஜய்யுடன்  பிரசாந்த், நடிகர் பிரபு தேவா,நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் G.O.A.T படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு  இசையமைக்கிறார்.

புத்தாண்டை முன்னிட்டு G.O.A.T படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதில் வயதான கெட்டப் மற்றும் இளமையான கெட்டப் என விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு “A Venkat Prabhu Hero” என்று டேக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் G.O.A.T படத்தில் யுவன் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பாடலை இளையராஜாவுடன் இணைந்து விஜய்யும் பாட உள்ளார் என்ற தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முன்னதாக இளையராஜா இசையில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை (1997) மற்றும் பிரண்ட்ஸ் (2001) ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ’ஓ பேபி’ பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்முறையாக இளையராஜா – விஜய் காம்போவில் ஒரு பாடல் இடம்பெற்றால் அது சமூகவலைதளத்தில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று இப்போதே ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

ஜார்கண்ட் முதல்வருக்கு நெருக்கடி : சோதனையை தீவிரப்படுத்தும் ED!

உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்… இயக்குநர் லோகேஷுக்கு எதிராக மனு

Vijay reunites with Ilayaraja after 23 years

+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *