இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ கோட் ‘ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை அப்படக்குழு இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ‘ கோட் ‘ . இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாக்ஷி சவுத்ரி, சினேகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இப்படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகுமென படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார்.
ஆனால், அவர் சொன்னபடி நேற்று எந்த ஒரு அறிவிப்பும் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து ‘ நிச்சயம் சிறப்பான ஒரு டிரெய்லரை உங்களுக்கு தருவோம் . அதற்கான பணிகள் இன்னும் நடந்து வருகிறது! ‘ எனப் பதிவிட்டார். அதோடு சேர்த்து படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற செப்.5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
ஏழை மக்களுக்கு 1000 ‘முதல்வர் மருந்தகம்’: முதல்வர் ஸ்டாலின்