விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (ஆகஸ்ட் 1) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசியல் பிரவேசம் எடுத்துள்ள விஜய்யின் தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், ஸ்னேகா, லைலா, வைபவ், யோகி பாபு உள்ளிட்ட பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் ஆதர்சம் யுவன் ஷங்கர் ராஜாவே கோட் படத்திற்கும் இசையமைக்கிறார்.
சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் கோட் படம் வெளியாகிறது.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி விசில் போடு பாடல் வெளியாகி, ஜென்ரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரிணி ஏஐ குரலில் இப்பாடல் தயாராகியிருந்தது.
இந்தநிலையில், மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு துள்ளல் பாடலாக இது உருவாக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம் !
அருந்ததியர் 3% இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு!