விஜய்யின் டபுள் ஆக்‌ஷன்… டபுள் ட்ரீட்: G.O.A.T புது போஸ்டர்!

Published On:

| By Selvam

goat movie poster release

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 68. இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. G.O.A.T படம் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு தேவா,நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் G.O.A.T படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா G.O.A.T படத்திற்கு  இசையமைக்கிறார்.

புத்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு GOAT படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வயதான விஜய்யும் இளம் வயது விஜய்யும் பைலட் உடையில் நடந்து வருவது போன்ற போஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. G.O.A.T படம் “A Venkat Prabhu Hero” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( ஜனவரி 1) GOAT படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் வயதான விஜய்யும் இளம் வயது விஜய்யும் கையில் துப்பாக்கியுடன் பைக்கில் வேகமாக செல்வது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. G.O.A.T படம் ஒரு Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருகிறது. G.O.A.T படத்தில் விஜய்யை இளமையாக காண்பிக்க டி-ஏஜிங் (DE-AGEING) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது G.O.A.T படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share