‘கோட்’ ரிலீஸ்… கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!

Published On:

| By Selvam

விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘G.O.A.T’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் வைக்கும் பேனர்களில் அவரது கட்சிப் பெயரான ‘ தமிழக வெற்றிக் கழகம் ‘ இடம்பெறக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘G.O.A.T’ . இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்திற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வைக்கும் பேனர்களில் ‘ ‘தமிழக வெற்றிக் கழகம் ‘ என்கிற பெயரைப் பயன்படுத்தாமல் ‘ விஜய் மக்கள் இயக்கம் ‘ என்கிற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘G.O.A.T’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ ஸ்பார்க்’ பல லட்ச பார்வைகளைத் தாண்டி சாதனைகளை புரிந்தாலும், யுவன் இசை மீதான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு இந்த மாதத்தில் விஜய்யின் ‘ தமிழக வெற்றிக் கழகம் ‘ கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் விழா நடக்கவிருப்பதால் இந்தப் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காது என்கிற தகவலும் பரவலாக பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தொடர் சரிவு… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

Olympics 2024: டோக்கியோவில் விட்டதை பாரிஸில் பிடிப்பாரா அதிதி அசோக்?

ஜெயரஞ்சனுக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த புது அசைன்மென்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel