தளபதி விஜய் நடிக்கும் ‘GOAT’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த வருடம் மே மாதம் ‘தளபதி 68’ என்று அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது வேகமாக நடந்து வருகிறது.
தளபதி விஜய் இரண்டு வேடங்களில் மிரட்ட இருக்கிறார். இதில் அவருடன் இணைந்து ஜெயராம், மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி போன்ற பலர் நடிக்கின்றனர்.
‘GOAT’ வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் நாளை ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எப்போதுமே விஜய் படத்தின் முதல் பாடல் மரண மாஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் தற்பொழுது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பாடலை தளபதி விஜய் தான் பாடியுள்ளாராம். மதன் கார்க்கியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இந்த பாடலில் பிரபுதேவா, பிரசாந்த் இருவருமே தோன்றுவார்கள் என்று தெரிகிறது.
பெப்பி சாங் ஆக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆவதால், தளபதி ரசிகர்களால் நாளைக்கு youtube அதிர போகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரணவ் – நிவின் பாலியின் வருஷங்களுக்கு சேஷம் – திரை விமர்சனம்!
அண்ணியாக இல்லை… அன்னையாக வருகிறேன் : பிரமேலதா உருக்கம்!
Video: ‘அப்படி’ பைக் ஓட்டியதால் வந்த சர்ச்சை… குக் வித் கோமாளி பிரபலம் விளக்கம்..!