நடிகர் விஜயின் GOAT படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இதனால், அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஸ்கீரின்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், இதுவரை 25 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் மட்டும் 40 கோடி வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
புக்கிங் அறிவிக்கப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 3.68 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. முதல் நாளில் தமிழகத்தில் 6 கோடிக்கும், கேரளா கர்நாடகத்தில் 3 கோடிக்கும் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 11 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது. இதனால், சர்வதேச மார்க்கெட்டில் கோட் படம் சக்கை போடு போடலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோட் படத்துக்காக சிறப்பு காலை காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது நள்ளிரவு காட்சிகள், அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ம் வருடம் அஜித் நடித்து வெளிவந்த ‘துணிவு’ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னையில் படம் பார்க்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.
ஆனால், கோவையில் பிராட்வே சினிமாவில் காலை 7 மணிக்கு கோட் படத்தின் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதுமே பரவலாக காலை 7 மணிக்கு தியேட்டர்களில் காட்சிகள் திரையிட வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே வேளையில் பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு கோட் படம் முதல் காட்சியாக திரையிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கோட் படத்தின் ஹீரோ விஜய்… இன்னொரு ஹீரோவும் இருக்காரு… யார் தெரியுமா?
முதலீடுகளை ஈர்க்க சிகாகோ சென்ற ஸ்டாலின்