இணை இயக்குனரும், பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை நொளம்பூர் ஆண்டவர் நகர் ராமமூர்த்தி தெருவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், சென்னை வேளச்சேரி யை சேர்ந்த பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பாடலாசிரியர் விஷ்ணு இடவன் தற்போது திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
கத்தி படத்திலும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் வரும் போர் கண்ட சிங்கம் என்ற பாடலையும், நாயகன் மீண்டும் வரார் போன்ற பாடல்களை இவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.
புகாரில் விஷ்ணு இடவனை 3 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், தாங்கள் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள விஷ்ணு இடவன் வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் விஷ்ணு இடவனின் பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததையடுத்து,
நொளம்பூரில் V4 ரெசிடென்சி குடியிருப்பில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் விஷ்ணு இடவன், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பிரச்சினை செய்ததால் பெண் தரப்பினர்,
சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாடலாசிரியர் விஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண், பாடல் ஆசிரியர் விஷ்ணு இடவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை விஷ்ணு இடவன் தெரிவித்தார்.
இந்நிலையில் வளசரவாக்கத்தில் இருவரும் வசித்து வந்ததால் புகார் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் விஷ்ணு இடவன் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என டைரக்டர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை நயன்தாராவின் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து காவல் துறையினருக்கு பல்வேறு நெருக்கடி வருவதாக கூறப்படுகிறது.
கலை.ரா
‘perto’ வகை ஏடிஎம்களை குறி வைக்கும் கொள்ளை கும்பல்!
உயிருடன் இருக்கிறாரா பிரபாகரன்?: இலங்கை ராணுவம்!