எஸ். எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆனவர் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி படம் தந்த வெற்றிக்கு பின் சாஹோ, ராதே ஷாம், ஆதிபுருஷ் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பிரபாஸ் தொடர்ந்து நடித்தாலும், அவர் எதிர்பார்க்கும் மற்றொரு பான் இந்தியா வெற்றியை இதுவரை எந்த படமும் அவருக்கு தரவில்லை.
தற்போது கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலின் “சலார்”, மகாநதி பட இயக்குனர் நாக அஸ்வினின் “கல்கி 2898 AD “ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் சலார் படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பிரசாந்த் நீலின் முதல் படமான ‘ உக்ரம்’ படத்தின் ரீமேக் தான் சலார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நடிகர் பிரபாஸுக்கென இந்தியா முழுக்க ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், பொது இடத்தில் பிரபாஸுடன் போட்டோ எடுத்துக் கொண்ட ஓர் ரசிகை செய்த செயல், தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ரசிகை ஒருவர் பிரபாஸை பொது இடத்தில் கண்டவுடன் அவரோடு போட்டோ எடுக்க வேண்டும் என கேட்க, பிரபாஸும் அதற்கு ஒப்புக் கொண்டார். போட்டோ எடுத்த பிறகு சந்தோஷத்தில் அந்தப் பெண் பிரபாஸின் கன்னத்தில் செல்லமாக அடித்து விட்டார். பிரபாஸும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே அங்கிருந்து நகரத் தொடங்கிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ…
https://www.instagram.com/p/BumBLdvnEqw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனருக்கு 7 நாள் போலீஸ் காவல்!
501 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் வருவதால் குறையுமா?