ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகர் மனைவியுடன் மர்ம மரணம்… காரணம் என்ன?

Published On:

| By Kumaresan M

ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனும் ( 93), அவரது மனைவியான பெர்சியும் ( 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள சாந்தா ஃபே என்ற நகரத்தில் வசித்தனர். நேற்று புதன்கிழமை அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் வளர்த்து வந்த நாயும் வீட்டுக்குள் இறந்து கிடந்தது.GenGene Hackman and wife diee Hackman

மரணத்தில் சந்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். அதே வேளையில், கார்பன் மோனாக்ஸைடு கசிவு வீட்டில் ஏற்பட்டு ஜீன் ஹாக்மேன் மனைவியுடன் இறந்து போனதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

ஜீன் ஹாக்மேன், தி பிரெஞ்சு கனெக்சன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்காகவும், அன்ஃபர்கிவென் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்காகவும் என, இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.Gene Hackman and wife die

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share