நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டாடா”. இந்தபடம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 5 ) ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர்.
கதாநாயகனாக இவர் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படம் இவருக்கு சரியாக கை கொடுக்காமல் போனாலும் அவருடைய விடா முயற்சியினால் அடுத்த படமான ‘லிஃப்ட்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் ‘ஆகாஷ் – வாணி’ இணையதொடரிலும் நடித்தார். தற்போது கவின் ‘ஊர் குருவி’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவின் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் ‘டாடா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், ‘டாடா’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை போரம் விஜயா மாலில் இன்று நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் நடிகர் கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது.
நகைச்சுவையுடன் காதலும் அதில் வரும் சிக்கல்களையும் பேசியிருக்கும் ”டாடா” படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பாக படத்தின் ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் ‘போகாதே’ என்ற பாடல் ஜென் மார்டின் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
கவின் நடிப்பில் நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள ”டாடா ”படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தமிழகமெங்கும் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
234 சூதாட்டம், கடன் செயலிகளுக்குத் தடை!
பேனா சின்னம்.. காழ்ப்புணர்ச்சி.. அரபிக்கடலில் சிவாஜி நினைவிடம் சரியா? கே.எஸ்.அழகிரி