“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்வதற்காக தான் நடிக்க தொடங்கியதாக கௌதம் மேனன் பல இன்டர்வியூகளில் கூறியிருந்தார். சமீபத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் புரோமோஷனுக்காக மும்பை சென்ற கௌதம் மேனன், நேற்று (நவம்பர் 15) இந்தியா – நியூ சிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டி ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கௌதம் மேனனிடம், ” கிரிக்கெட் தொடர்பான படத்தை இயக்குவீர்களா?” என்று கேட்ட கேள்விக்கு “எனது அடுத்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தியதாக தான் இருக்கும், அந்த படத்தின் கதை சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து உருவாகி இருப்பதாகவும், இரண்டு நண்பர்கள் கிரிக்கெட் விளையாட்டில் டிஸ்ட்ரிக்ட் லெவலில் இருந்து எப்படி ஸ்டேட் லெவலுக்கு முன்னேறுகின்றனர் என்பதே படத்தின் கதை” என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
’எடப்பாடிக்கு தூதா..? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’: பன்னீர் கோபம்!
வேலைவாய்ப்பு: தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகத்தில் பணி!