நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று (நவம்பர் 28 ) சென்னையில் நடந்ததை அடுத்து இருவரும் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக், ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்தபோது அவருடன் நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் காதல் ஏற்பட்டது.

இவர்களுடைய காதல் பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இவர்களுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம்..சஞ்சு சாம்சனுக்காக களத்தில் குதித்த ரசிகர்கள்!