2070-ல் நடக்கும் கதை: பாய்ந்து அடிக்கும் டைகர்!

சினிமா

டைகர் ஷெராப் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “கண்பத்”. கங்கனாவின் குயின், ரத்திக் ரோஷனின் சூப்பர் 30 போன்ற ஹிட் படங்களை இயக்கிய விகாஸ் பால் (Vikas Bahl) தான் கண்பத் படத்தை இயக்கியுள்ளார். Dystopian Genre-இல் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் விகாஸ் பால்.

அமிதாப் பச்சன், கிருத்தி சனோன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஏதோ சில காரணத்தினால் கண்பத் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது கண்பத் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் 2070 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் டைகர் தியானம் செய்து கொண்டிருப்பது போல் தொடங்கும் இந்த டீஸரில் உலகமே வறுமையிலும் வன்முறையிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் போராட்டத்திற்குத் தயாராகி கொண்டு இருக்கின்றனர். “ஒரு வீரன் வரும் வரை யுத்தத்தை தொடங்க வேண்டாம்” என்ற வசனம் முடிந்தவுடன் டைகரின் ஆக்சன் துவங்குகிறது. அதன் பிறகு டீஸர் முழுவதும் எதிரிகளை பறந்து பறந்து அடித்துக் கொண்டே இருக்கிறார் டைகர்.

கண்பத் படத்தின் டீஸர் பிரபாஸின் கல்கி 2898 AD படத்தின் Glimpse வீடியோவை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது. ஏனென்றால் கல்கி Glimpse வீடியோவிலும் மக்கள் போராட்டம், ஹீரோவிற்காக காத்திருப்பது, போன்ற காட்சிகள் உள்ளது. மேலும் முக்கியமாக படத்தின் டைட்டில் அது கல்கி இது கண்பத்.

இருந்தாலும், டைகர் ஷெராபின் கண்பத் படம் புதிய கதையம்சம் கொண்ட ஆக்சன் நிறைந்த சூப்பர் படமாக இருக்கும் என்று நம்புவோம்.

– கார்த்திக் ராஜா

கிச்சன் கீர்த்தனா: தினை கேசரி

எம்.ஜி.ஆரும் அண்ணாமலையாரும்…: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *