மௌன மொழியில் காந்தி டாக்ஸ்!

சினிமா

மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம்.

அந்த வரிசையில் தனது அடுத்தப் படைப்பாக வசனமேயில்லாத மௌனப் படமாக ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளது.

ப்ளாக் காமெடி ஜானரில்,  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து  நடிக்கின்றனர்.

இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின்  ஒரே மொழி என்பது இசை மட்டுமே.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் கூறுகையில், “மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல்  அல்ல. இது கதை சொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும்  நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும்கூட…” என்றார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. 

ஒரு மௌனப் படமாக இருப்பதால், இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் அனைத்து ‘மொழி’ சார்ந்த தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை – நிகழ் காலத்தில்  பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி

.இப்படம் உலகம் முழுவதும் 2023-ல்  வெளியாகவுள்ளது.

இராமானுஜம்

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

கிச்சன் கீர்த்தனா : வேர்க்கடலை – முளைப்பயறு சாலட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *