ஜிவி பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபெல். ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங் போன்ற படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது ரெபெல் படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். அதை தொடர்ந்து கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ரெபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்தின் மூலமாக ஜிவி பிரகாஷ் ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
#Rebel song from 1st … pic.twitter.com/OfKuf31dBs
— G.V.Prakash Kumar (@gvprakash) November 29, 2023
இந்நிலையில் ரெபெல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “அழகான சதிகாரி” என்ற பாடல் வரும் டிசம்பர் 01 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெபெல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
கனமழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்: ராகுல்காந்தி