இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ‘ கோட் ‘ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட் ‘. இந்தத் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான மூன்று பாடல்கள் பல லட்ச பார்வையாளர்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்து வந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் குறித்த அதிருப்தியும், விமர்சனமும் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டான படத்தின் டிரெய்லரை மிகச் சிறப்பாகத் தர வேண்டும் என அப்படக்குழு டிரெய்லர் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே வருகிற ஆக.19 ஆம் தேதி இந்தப் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதியிலேயே டிரெய்லரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனராம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையிலும் இந்தப் படத்தின் டிரெய்லரைக் கொண்டு சேர்க்கலாம் என்கிற எண்ணத்தில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே ரிலீஸான படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், படத்தின் டிரெய்லர் நிச்சயம் சிறப்பாக இருக்க வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக வெங்கட் பிரபுவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மூன்று பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தியால் சோர்வடைந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் ரீரெக்கார்டிங் பணிகளுக்குப் பின்பு உற்சாகமாகியுள்ளாராம்.
இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் செப்.5 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
Paris 2024 : ஒரே நாளில் 3 பதக்கம்… ஒலிம்பிக்கில் இன்று உயருமா இந்திய கொடி?
வினேஷ் போகத் தகுதிநீக்கம் : எதிர்க்கட்சிகள் அமளி… அவை தலைவர் வெளிநடப்பு!