Weekend Movies: திரையரங்குகள், ஓடிடி-யில்… இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள்!

Published On:

| By Minn Login2

இந்த வாரம் திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகி இருக்கும் படங்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

திரைப்படங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘ரிபெல்’ படம் இன்று (மார்ச் 22) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கியுள்ளார்.

ஶ்ரீ ஹர்ஷா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீவிஷ்ணு, ராகுல் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் ‘ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்கு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில், ‘அச்சகல்லகொக்கன்’, இந்தியில் வலதுசாரி சிந்தனையாளர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு படமான ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ வெளியாகி உள்ளன.

ஆங்கிலத்தில் ‘அர்துர் தி கிங்’ மற்றும் ‘இமேஜினரி’ (Imaginary) ஆகிய படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?

ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கும் படங்கள்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி, பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான, ‘ஃபைட்டர்’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று (மார்ச் 21) வெளியாகியுள்ளது.

மம்முட்டி , ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ‘ஆப்ரகாம் ஓஸ்லர்’ என்ற மலையாள திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 20-ம் தேதி வெளியாகியுள்ளது.

IPL 2024: ”எல்லாம் மாறும்” புது கேப்டனுக்காக வீடியோ வெளியிட்ட CSK

தொகுப்பாளரும், நடிகருமான ரக்‌ஷனின் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் மார்ச் 19-ம் தேதி வெளியாகியுள்ளது.

நடிகர் சிவ கந்துகுரி நடிப்பில் வெளியான ‘பூதடம் பாஸ்கர் நாராயணா’ என்ற தெலுங்கு திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நேற்று ‘ ஏ வாடன் மேரே வாடன்’ (Ae Watan Mere Watan) என்ற இந்தி படமும் ரோட் ஹவுஸ் (Road House) என்ற ஆங்கில படமும் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.

x amn 97

வெப் சீரிஸ்கள்

கடந்த மார்ச் 20 ஆம் தேதி “X Men’97” என்ற ஆங்கில வெப் சீரிஸ் மற்றும் மார்ச் 22 ஆம் தேதி “Lootere” என்ற இந்தி வெப் சீரிஸ் ஆகியவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதேபோன்று மார்ச் 21 ஆம் தேதி “3 Body Problem” என்ற ஆங்கில வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் கைதுக்கு அவரே காரணம் – முன்னாள் குரு அன்னா ஹசாரே

விஜயபாஸ்கர் வீட்டில் ED… பாஜகவை பாராட்டும் திமுகவினர்!

அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel