ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட நிலையில் வார இறுதி நாட்களில் என்ன புதிய படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
அதுபோன்று குடும்பத்தினர் நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு சென்று வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிக்கவும் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று(ஜூலை 26) திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
ராயன்
நடிகர் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் திரைப்படம் இன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
லெவல் கிராஸ்
நடிகர் ஆசிப் அலி, நடிகை அமலாபால் மற்றும் ஷராபுதின் நடிப்பில் தயாராகியுள்ள மலையாள படமான லெவல் கிராஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இன்று வெளியாகிறது.
தி யுபி பைல்ஸ்!
நடிகர் மனோஜ் ஜோஷி நடிப்பில், நீரஜ் சாகாய் இயக்கியுள்ள படமான தி யுபி பைல்ஸ் இன்று வெளியாகிறது.
டெட்பூல் வோல்வரின்!
மார்வெல் சினிமாடிக் யுனிவர்சின் 34 வது படமான டெட்பூல் வோல்வரின் படம் இன்று வெளியாகிறது. டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 தொடர்ச்சியாக இந்த பாகம் வெளியாக உள்ளது.
ஓடிடி ரிலீஸ்
நடிகர் யோகி பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் சட்னி சாம்பார் வெப் தொடர் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்த தொடரில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்
குகன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள வெப்பன் ஆகா ஓடிடியில் வெளியாகிறது.
ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான பாரடைஸ் திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
விமலா ராமன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்த கிராண்ட்மா திரைப்படம் ஆகா ஓடிடியில் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!
வனவிலங்குகளால் உயிரிழப்போர் குடும்பத்துக்கு கருணைத் தொகை உயர்வு!