கமல்ஹாசன் நடித்த “கல்கி 2898 AD” படத்திலிருந்து இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்கள் என்னெவென்று பார்க்கலாமா?
தியேட்டர் ரிலீஸ்
ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த “கல்கி 2898 AD” திரைப்படம் நாளை (ஜூன் 27) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் பலரையும் கவர்ந்தது.
அது மட்டுமின்றி ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நிச்சயம் ரூ.1000 கோடியை தாண்டி வசூலிக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி பெரும் ஆரவாரத்துடன் வெளியாகும் “கல்கி 2898 AD” ரிலீசுக்கு முன்பே அதிக கல்லாகட்டி விட்டது.
OTT ரிலீஸ்
பிரித்விராஜின் நடிப்பில் வெளியான “குருவாயூர் ஆம்பள நடையில்” படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படம் நாளை (ஜூன் 27) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
அதேபோல், “இந்தியன் 2” படம் ஜூலை 12 தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாகம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கும் “உப்பு புளி காரம்” வெப் சீரிஸின் புது எபிசோட் இன்று (ஜூன் 26) ஒளிபரப்பப்படும். அதேபோல், “ஹார்ட் பீட்” வெப் தொடரின் எபிசோட் நாளை (ஜூன் 27) வெளியாகும்.
முன்னதாக அமீர் நடிப்பில் வெளியான “உயிர் தமிழுக்கு” என்ற படம் ஆகா தமிழ் ஓடிடியில் நேற்று வெளியானது. மேலும் “ஐ சா த டெவில்” என்ற கொரியன் படமும் தற்போது தமிழில் ஜூன் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும், ஜூலை 12ஆம் தேதி “இந்தியன் 2” படமும், தனுஷ் நடிக்கும் “ராயன்” படம் ஜூலை 26ஆம் தேதியும் தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்நாளிலேயே ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி!
சாதிவாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!