இந்த வார ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் இதோ!

சினிமா

ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த கருடன் திரைப்படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “கருடன்” திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கருடன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலைக்குப் பின்னர் ஹீரோவாக சூரிக்கு கம்பேக் கொடுத்த கருடன், தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஓடிடியிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதேபோல் 1980களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த மோகன் கதாநாயகனாக நடித்த ஹரா திரைப்படம், ஜூன் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் ஸ்ரீ இயக்கிய இப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

விஜய் கனிஷ்கா, சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்த “ஹிட் லிஸ்ட்” படமும் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குர்மீத் சிங், ஆனந்த் ஐயர் இயக்கத்தில் உருவான ’மிர்சாபூர் சீசன் 3’ அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 2 சீசன்களை போல, மூன்றாவது சீசனும் ஆக்ஷன் ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரில் மிரட்டியுள்ளதாக ஓடிடி ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத்தில் நிவின் பாலி, டிஜோ ஜோஸ் ஆண்டனி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “மலையாளி ஃப்ரம் இந்தியா” (Malayalee from India) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது.

தெலுங்கில் “மார்க்கெட் மகாலட்சுமி” திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், இந்தியில் ஸ்ரீகாந்த் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகியுள்ளன.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை!

பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் இடம்பிடித்த 5 தமிழர்கள்!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *