ஈபிஎஸ் முதல் ரஜினி வரை : வாழ்த்து மழையில் அஜித்

Published On:

| By Kavi

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார்பந்தயத்தில் அஜித் குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடம் பிடித்த வெற்றி பெற்றுள்ளது. 

நடிகர் அஜித்குமார் சினிமாவில் மட்டுமின்றி கார் ரேசிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார்ரேசிங் என்ற கார் ரேசிங் அணியை உருவாக்கி துபாயில் நடைபெற்ற 24H கார்பந்தயத்தில் கலந்து கொண்டார்.

இதில் தகுதி சுற்றில் அஜித்  அணி ஏழாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

இந்நிலையில் 991ஆவது பிரிவில் அஜித் அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. 

இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் அணிக்கு பாராட்டு அளிக்கப்பட்டது. அப்போது அணியின் உரிமையாளராக பேசிய அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியை பார்த்து, “என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷாலு” என்று கூறி பிளைன் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அஜித் தனது கார் ரேஸ் உடையில் தமிழக விளையாட்டுத் துறை லோகோவையும் இடம் பெறச் செய்திருந்தார். ரேஸில் வெற்றி பெற்றதும் அந்த லோகோவை கேமராவில் காட்டி மகிழ்ந்தார்.

கார் ரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

துணை முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்த குறிப்பிடத்தக்க சாதனையை படைத்த அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இப்படியொரு மதிப்புமிக்க பந்தய நிகழ்ச்சியில் திராவிட மாடல் அரசின் விளையாட்டுத் துறை லோகோவை காட்டியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
துபாயில் நடைபெற்ற 24HSeries கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்கள் தலைமையிலான AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
அஜித்குமாரின் ரேஸிங் குழுவினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்.

நடிகர் ரஜினிகாந்த்
எனது அன்புள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள். லவ் யூ.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் Spirit of the Race விருது பெற்ற அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள்.
அவரும், அவரது அணியினரும் மேலும் பல‌‌ வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!

தங்கம் விலையில் தொடர் ஏற்றம்… பொங்கல் பண்டிகை எதிரொலியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share