அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?

சினிமா

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்ட பிறகு, பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். யாராவது படுக்கைக்கு அழைத்தால் , செருப்பை கழற்றி அடிங்க என்றும் விஷால் நடிகைகளுக்கு அறிவுரை கூறினார்.

அப்போது,  விஷால் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஸ்ரீரெட்டி, தன்னிடத்தில் ஏராளமான செருப்புகள் உள்ளன. வேண்டுமா? என்று விஷாலுக்கு பதிலடி கொடுத்தார்.

அதோடு, விஷாலின் பெயரை நேரடியாக சொல்லாமல் தொடர்ந்து மறைமுகமாக நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியிட்ட பதிவில்,  ”ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான ஆம்பள நரி தொல்லைகளை கொடுத்துக் கொண்டே இருக்கும்பெண்கள் தங்கள் கனவை அடைவதற்காக படுக்கையை பகிர்ந்துக் கொண்டால், அவர்களை பிராஸ்டிட்யூட் என அழைக்கும் இந்த சமூகம் ஆண்களுக்கு அப்படி எந்த அவமானகரமான சொற்களையும் சூட்டியது கிடையாது” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

மேலும் அவர், “இருவர் சேர்ந்து தவறு செய்தால், பெண்கள் மீது தான் இந்த உலகம் தவறு சொல்கிறது. ஆண்கள் எப்போதுமே சரியானவர்கள் என்கிற பிம்பம் தான் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. சில நல்ல ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக உள்ளனர். அதே வேளையில் சில மோசமான நரிகள் பெண்களை சூறையாடிக் கொண்டிருப்பதும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது” என்று ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கடைசி மலையாள படத்தில் மோசமான அனுபவம் ஓடி வந்துட்டேன்! – நடிகை கஸ்தூரி

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும் : உச்சநீதிமன்றம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *