சரவணன் அருள் நடிப்பில் ஜூலை 29 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.
இப்படத்தை ஜெடி – ஜெரி இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். இவர்கள் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்கள்.
இப்படத்தில் விவேக், ஊர்வஷி ராவ்டெலா , பிரபு , சுமன் , விஜயகுமார் , கீதிகா திவாரி , ரோபோ ஷங்கர் , யோகி பாபு , நாஷர் , விஜயகுமார் , லிவிங்ஸ்டன் , தம்பி ராமையா என பல பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
வசூல் விவரம்
இப்படம் வெளிவந்த நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் தற்போது சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.45 கோடி செலவில் உருவான ‘தி லெஜண்ட்’ வெளிவந்த நான்கு நாட்களின் முடிவில் சுமார் ரூ. 6.5 கோடி வரை பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்துள்ளது. பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் வசூல் குறைவுதான் என்கின்றனர் சினிமா வர்த்தகர்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சந்தானத்தின் குலுகுலு: படம் எப்படி?