Kasthuri blasts Poonam Pandey

போலி மரணச் செய்தி : பூனம் பாண்டேவை விளாசிய கஸ்தூரி

சினிமா

”வெற்று விளம்பர வித்தைக்காக  கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டதாக பூனம் பாண்டே கூறியது வெட்கக்கேடானது” என்று கஸ்தூரி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்தார் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (பிப்ரவரி 2) தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவரது பக்கத்தில் வெளியான வீடியோவில் தோன்றி பேசிய பூனம் பாண்டே, “நான் உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலி மரணச் செய்தி வெளியிட்டேன்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து விழிப்புணர்வு என்ற பெயரில் சீப் பப்ளிசிட்டிக்காக பூனம் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகை கஸ்தூரி சங்கரும் தனது ஆதங்கத்தை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “பூனம் பாண்டேவுக்கு 32 வயது தான் ஆகிறது. அவரது மரணம் குறித்து கேள்விப்பட்ட நிமிடமே அது பொய்யான செய்தியாக தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

நாட்டில் பூனம் பாண்டேவை விட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பிரபலமாக இருக்கிறது. வெற்று விளம்பர வித்தைக்காக புற்றுநோயைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. கவனத்தை ஈர்ப்பதற்காக பூனத்தின் வேசித்தனமான இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இதே போன்று பலரும் சமூகவலைதளங்களில் பூனத்திற்கு எதிராக காட்டமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்கும் சிபிஐ!

AK64: பிரமாண்ட நிறுவனத்துடன் கைகோர்த்த அஜித்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *