கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.
தொடர்ந்து, ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல நடிகைகள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
விளைவாக,நடிகைககளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் எம்.எல்.ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். மற்றொரு நடிகரான சித்திக் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்காத நிலையில், தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல மலையாள மற்றும் கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரனும் தமிழ் பட தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு வருடத்துக்கு முன்பு நான் நடித்த கன்னட படத்தின் உரிமையை வாங்கியிருந்த தமிழ்ப்பட தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டார். அந்த படத்தில் நடிக்கவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது, நான் கன்னட படத்தில் நடித்த அதே ஹீரோயின் வேடத்தில்தான் நடிப்பேன் என்று கூறினேன். இதையடுத்து, அவர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார். அது மட்டுமல்லாமல் , 5 தமிழ்ப்பட தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் தேவையாக இருப்பதாகவும் என்னிடம் கூறினார். இது எனக்கு ஷாக்களித்தது. தொடர்ந்து, திட்டி போனை வைத்து விட்டேன். பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நடிகைகள் ‘ இல்லை ‘என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
எஸ்.பி.பி பெயரில் சாலை… முதல்வருக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி மகன்!