இயக்குனர் பா.ரஞ்சித்தின் புதிய படைப்பான நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் சிங்கிளான, ‘ரங்க ராட்டினம்’ பாடல் இன்று (ஆகஸ்டு 8) வெளியிடப்பட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரையைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கும், இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் , தென்மா இசையமைத்துள்ளார்.
ரங்கராட்டினம் பாடலை எஞ்சாயி எஞ்சாமி புகழ் தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார். இந்த பாடலை கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஜய் சேதுபதியுடன் நெருக்கமாகும் மாளவிகா மோகனன்