வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் GOAT. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, ஜெயராம், பார்வதி நாயர், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் அரவிந்த் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
இதில் விஜய் வயதான வேடத்திலும், இளைஞராகவும் நடித்து வருகிறார். வயதான விஜய்க்கு சினேகாவும், இளைஞர் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில், ” GOAT படத்திற்காக விரைவில் பாடல் ஒன்றை ஷூட் செய்ய உள்ளனர்.
இதில் விஜயுடன் இணைந்து ஆடப்போகிறேன். அவரின் எனர்ஜிக்கும், டான்ஸ் ஆடும் விதத்திற்கும் நான் மேட்ச் ஆவேனா? என்பது நினைத்தால் பதட்டமாக உள்ளது,” என தெரிவித்துள்ளார்.
இதை வைத்துப் பார்க்கும்போது அது இருவருக்கும் இடையிலான ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என்பது தெரிகிறது. இதனால் விரைவில் GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் யுவன் 3 பாடல்களை முடித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
GOAT படம் பக்ரீத் ஸ்பெஷலாக வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜக உள்ளேயே யுத்தம் ஆரம்பித்துவிட்டது” : ஆ.ராசா
சாய் பல்லவி வீட்டில் விசேஷம்… வெளியானது நிச்சயதார்த்த புகைப்படம்!