அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி இந்தியா முழுக்க பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் “அனிமல்” படத்தில் நடத்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓர் ஆக்ரோஷமான இளைஞராக, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் நடித்திருப்பது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “HUA MAIN” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியாகி உள்ளது. “HUA MAIN” பாடலின் தமிழ் வெர்ஷனுக்கு “நீ வாடி” என பெயரிடப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர், ராஷ்மிகா இருவரும் குடும்பத்தினரின் முன்பு முத்தமிடும் காட்சியோடு, இயக்குனர் சந்தீப் ரெட்டி ஸ்டைலில் இந்த பாடல் தொடங்குகிறது. வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே இந்த பாடலின் ஹிந்தி வெர்ஷன் டிரெண்டிங் 4-லும் மற்றும் தமிழ் வெர்ஷன் டிரெண்டிங் 5-லும் இடம் பிடித்துவிட்டது.
அர்ஜுன் ரெட்டி படத்தைப் போலவே இந்த அனிமல் படமும் மிகப்பெரிய டிரெண்டு செட்டராக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல அனுமதி!
ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!