ஜப்பான் : ராஜூ முருகனின் தங்க அரசியல்!

சினிமா

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை நேற்று (நவம்பர் 14) வெளியானது.

தமிழ் சினிமாவில் அரசியலை அதிகமாக பகடி செய்தவர் மறைந்த நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி.

இந்திய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் முகமது பின் துக்ளக், இங்கு யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்.

அவரைப் போன்று நேரடியாக அரசியல் பகடி செய்யும் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார் ராஜு முருகன். ஜோக்கர் படத்தின் மூலம் தமிழக அரசியல்வாதிகளை பகடி செய்திருந்தார்.

first look poster of karthi japan out

ராஜூ முருகன் இயக்கத்தில் முதன் முறையாக கார்த்தி நடிக்க உள்ளார். அவரது மெட்ராஸ், சகுனி படங்கள் அரசியல் பேசிய நிலையில் தற்போது “ஜப்பான்” திரைப்படத்திலும் அரசியல் பேசப்பட உள்ளது.

இது கார்த்தி நடிக்கும் 25-வது படம் . இந்தப் படத்தின் முதல் பார்வை, அவர் நடிப்பில் வெளியான சர்தார் வெளியான 25-வது நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் தக தக என மின்னும் தங்க நிற உடையில் இருக்கிறார் கார்த்தி.

ஒரு கையில் உலக உருண்டை, மற்றொரு கையில் துப்பாக்கி, கழுத்து நிறைய தங்க நகைகள், அதில் உள்ள ஒரு தங்க டாலரில் இந்திய ரூபாயின் மதிப்பை குறிக்கும் குறியீடு போன்றவை இடம் பெற்றுள்ளது.

first look poster of karthi japan out

அதே போஸ்டரில் ஒரு சேரில் மயக்க நிலையில் கார்த்தி அமர்ந்திருப்பது போன்றும், அதே அறையில் மயக்கநிலையில் இரண்டு பெண்கள் இருப்பது போன்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இதனால் நான்கு மொழிகளிலும் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பார்வையில் இடம்பெற்றிருக்கும் தங்கம், துப்பாக்கி, சிவப்பு நிற சட்டை, பெண்கள் என எல்லாமே படத்தில் ராஜு முருகன் பேச போகிற அரசியல் பகடிகளின் குறியீடாக இருக்கும் என தெரிகிறது.

ராமானுஜம்

திருமண வாழ்க்கை: வதந்திகளுக்கு சினேகாவின் போட்டோ பதிலடி!

பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0