தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளை திரைப்படமாக்கும் இயக்குநர்களில் தங்கர்பச்சானும் ஒருவர். அவரது இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”.
பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்ற எளிமையான நிகழ்வில் வெளியிடப்பட்டது .
அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
பாரதிராஜா இப்படம் பற்றி பேசுகையில், “தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.
முதல் பார்வையை வெளியிட்ட நடிகர் கமலஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில், “தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை.
இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது, எனக்கு பேராச்சர்யம்.
இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள்” என்றார்.
இந்தப் படத்தில மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திர சேகர் , ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பாடல் வரிகள் வைரமுத்து, ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் எடிட்டிங் பி.லெனின், கலை இயக்குனர் மைக்கேல்
தயாரிப்பாளர் டி துரை வீரசக்தி ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.
இராமானுஜம்
சார்பட்டா 2: சந்தோஷ் இசையமைப்பாரா? ட்ரெண்டான வட சென்னை 2…
பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்?