இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!

entertainment சினிமா

தியேட்டர்களில் படங்கள் வாராவாரம் வெளியாவதைப்போல் ஓடிடியிலும் படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி யில் வெளியாக உள்ள படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கலாம்:

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே. வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ் டுடே திரைப்படம் வெளியிடப்படுகிறது.

மிரள்

ராட்சசன் பட தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரிப்பில் எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மிரள்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Films Awaiting OTT Release This Week

பரோல்

துவாரக் ராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பரோல், லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக் நடிப்பில் வெளியான இப்படம் பரோலில் வெளிவரும் கைதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

Films Awaiting OTT Release This Week

நித்தம் ஒரு வானம்

புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம், நித்தம் ஒரு வானம்.

அசோக் செல்வன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ஷிவானி ராஜசேகர் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Films Awaiting OTT Release This Week

காலங்களில் அவள் வசந்தம்

புதுமுக இயக்குனர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம், அஞ்சலி நாயர், கவுசிக் ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி அன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

Films Awaiting OTT Release This Week

வதந்தி (வெப் தொடர்)

கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர், வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான காயத்ரி ,புஷ்கர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாரிசு படத்தின் புதிய போஸ்டர்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!

+1
7
+1
5
+1
2
+1
7
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published.