முதல்வரை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள் : ஏன்?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைய சில மாதங்களே இருக்கும் நிலையில் கடந்த 18.09.2022 அன்று சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள” கலைஞர் அரங்கத்தில்” பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகைய விரைவாக வழங்கவும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும்,
பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.முரளிராமசாமி நேற்று(19.09.2022) வழங்கினார்.
அவருடன் சங்கத்தின் கெளரவ செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர், எஸ்.கதிரேசன் பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் சென்றிருந்தனர்
‘நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய கால அவகாசத்தில் (21 நாட்களுக்கு முன்பு) பொதுக்குழு கூட்டுவதற்கான தகவல் அனுப்பபடவில்லை,
சங்க சட்டவிதிகளை விவாதிக்க அனுமதிக்காமல் நிறைவேறியதாக அறிவிப்பதை ஏற்க முடியாது.
வரவுசெலவு தவிர்த்து வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்க முடியாது’ என கூறி மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்ஏ.சந்திரசேகர், சங்கத்தின் துணை தலைவர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பொதுக்குழுக்கூட்டத்தில் இருந்து தங்கள் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தனர்,
இந்த நிலையில் தமிழக முதல்வரை சங்கத்தின் தலைவர் சந்தித்து பொதுக்குழு தீர்மானங்களை வழங்க, எதிர்த்தவர்கள் சங்கப் பதிவாளருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் கலவர நிலவரம் ஏற்பட்டிருக்கிறது
அம்பலவாணன்
தனுஷுடன் இணையும் பிரியங்கா மோகன்
ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர் எப்படி?