ஜெட் ஸ்பீட் கலெக்சன்: “ஃபைட்டர்” பாக்ஸ் ஆபிஸ் இதுதான்!

சினிமா

ரித்திக் ரோஷனின் பேங் பேங், வார் மற்றும் ஷாருக்கானின் பதான் ஆகிய மெகா பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். தற்போது இவரது இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியான படம் ஃபைட்டர்.

இந்த படத்தில் ரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே, அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வியோகாம் ஸ்டுடியோஸ் மற்றும் மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் Patty என்று பெயர் கொண்ட ஃபைட்டர் பைலட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள Fighter Jet சண்டைக் காட்சிகள் மற்றும் VFX காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. மேலும், படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து கொண்டிருக்கிறது ஃபைட்டர் திரைப்படம்.

இதுவரை உலகளவில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைட்டர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே இந்த படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் டைகர் vs பதான் படத்திற்கு பின் ஃபைட்டர் 2 படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” அறிவிப்பு இதோ!

இது பூனை இல்ல புலி: புகழின் Mr.Zoo Keeper டிரைலர்!

சமூகத்தில் அறிவாளிகளுக்கு மரியாதை இல்லை: ஷான் ரோல்டன் ஆதங்கம்!

வேலைவாய்ப்பு : மாநகராட்சி, நகராட்சிகளில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *