உறியடி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் குமார் தற்போது ஹீரோவாக நடிக்கும் படம் Fight Club. இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மான் இயக்கியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “G Squad” தயாரிப்பு நிறுவனம் ‘Fight Club’ படத்தை தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜின் “G Squad” தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாகும் முதல் படமும் இதுதான்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் Fight Club படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. “நான் பொறக்கறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட சாகாது” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசரில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது.
1980களில் வெளியான கமல்ஹாசனின் “விக்ரம்” படத்தில் இடம்பெற்றுள்ள “என் ஜோடி மஞ்ச குருவி” என்ற பாடலை பிஜிஎம் ஆக டீசர் முழுக்க பயன்படுத்தியிருப்பது அட்டகாசம்.
#FightClubTeaser – Step into the world of raw, rustic, and intractable battles! 👊https://t.co/GawzHVoznI
Coming to theatres from December 15th! 💥@Dir_Lokesh @Vijay_B_Kumar @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films @GSquadOffl@mytrimonisha #GovindVasantha pic.twitter.com/FwYAQ80Uj0
— GSquad (@GSquadOffl) December 2, 2023
Fight Club படம் வரும் டிசம்பர் 15 அன்று தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஒரு உடல்… இரண்டு உயிர்… ரசிகர்களை கவர்ந்த ஆளவந்தான் புது ட்ரெய்லர்!