லியோ நடன கலைஞர்கள் சம்பள விவகாரம்: மறுப்பு தெரிவித்த பெப்சி!

Published On:

| By Selvam

fefsi refused leo dance artist complaint

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்ற வன்முறை காட்சிகளுக்கும், கெட்ட வார்த்தைக்கும் எதிராக பலரும் நடிகர் விஜய்யையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

fefsi refused leo dance artist complaint

லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் சர்ச்சைகளும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தில் பணியாற்றிய நடன கலைஞர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்கப்படவில்லை என்று சில நடன கலைஞர்கள் லியோ படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த பிரச்சனை சில நாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

லியோ படத்தில் இடம் பெற்றுள்ள “நான் ரெடி தான் வரவா” பாடலில் விஜய்யுடன் மொத்தம் 1400 நடன கலைஞர்கள் நடனமாடி இருக்கின்றனர். இந்த 1400 நடன கலைஞர்களுக்கும் முறையாக ஊதியம் அளிக்கப்படவில்லை என்று சில நடன கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர்.

மேலும் மூன்று நாட்களுக்குள் சம்பள பாக்கியை தரவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரித்தனர்.  இந்த சம்பள விவகாரம் குறித்து லியோ பட தயாரிப்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க நடன கலைஞர்கள் ஒன்று கூடியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 22,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் ஆனால் 7,000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் நடன கலைஞர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நடன கலைஞர்களின் இந்த ஊதிய விவகாரம் குறித்த புகாரை மறுத்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI). மேலும் தற்போது இந்த விவகாரம் குறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இன்று சில காணொளிகளில் லியோ திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குபெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம்.

லியோ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிகள் 2000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

ஏனெனில் அதிகபட்சமாக 1000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். இதுபோன்று அதிகமாக நடன கலைஞர்கள் தேவைப்படும் போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள்/ பெண்களை பின் வரிசையில் நிற்கவைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் உட்பட 1000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

fefsi refused leo dance artist complaint

இந்த லியோ திரைப்படத்தில் 1400 உறுப்பினர் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள ‘ஆதி ஸ்ரீராம்’ ஸ்டுடியோஸில் கடந்த ஜூன் மாதம் 06.06.23 முதல் 11.06.23 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குபடுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

தற்போது ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டு விட்டது. அதேபோல் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் ஆறு நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அடிப்படை வசதியின்றி ஆதிவாசிகளாக வாழும் மக்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்கும் நயன்தாரா?

பிக் பாஸ்: இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரீயா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share