எது ப்ளைட் புடிச்சு வர்றது அம்புட்டு கஷ்டமா?… மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

bigg boss maya memes

நேற்று முன்தினம் (டிசம்பர் 23) பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறவினர்கள் சந்திப்பு குறித்து கமல் போட்டியாளர்களிடம் உரையாடினார். அப்போது மாயாவிடம் ஏன் உங்க அம்மா வர வேணாம்னு நெனச்சிங்க? என்று கமல் கேட்டார்.

பதிலுக்கு மாயா, ”காட்ல இருந்து 4 கிலோ மீட்டர் நடந்து பஸ் புடிக்கணும். பஸ்ல 2 மணி நேரம் டிராவல் செஞ்சு டாக்ஸி புடிக்கணும்.

அங்க இருந்து மறுபடி ப்ளைட் புடிச்சு தான் என்ன பார்க்க வரணும். ரொம்ப கஷ்டம். அதனால தான் வேணாம்னு சொன்னேன்,” என்றார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”ப்ளைட் வசதி இருக்குற ஊர்ல இருந்துக்கிட்டு எல்லாத்தையும் கஷ்டம்னு சொல்றீங்க. அதுமாதிரி ஊர் தமிழ்நாட்ல எங்க இருக்குன்னு கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்க.

ப்ளைட் புடிக்குற அளவுக்கு வசதி வச்சிட்டு யாராவது ஆட்டோ, பஸ்ல வருவாங்களா? ஒரு கார் புக் பண்ணி தானே விமான நிலையத்துக்கு வருவாங்க.

ப்ளைட்ல வர்ற அளவுக்கு வசதி உள்ளவங்க நேரடியா ஒரு டாக்ஸி புடிச்சு சென்னை வந்துருக்கலாமே,” என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

முன்னதாக மாயா அம்மா அவரை பார்க்க வந்தபோது நாங்க ரொம்ப கஷ்டப்படுற பேமிலி என போட்டியாளர்களிடம் கூறினார். அப்போது உங்க மூத்த பொண்ணு என்ன செய்றாங்க என கேள்வி வந்தது.

பதிலுக்கு,  ”அவ ஹார்வர்டுல படிக்குறா. கடந்த 15 வருஷமா நாங்க 6 மாசத்துக்கு ஒருமுறை தான் அமெரிக்கா போய்ட்டு வரோம், ”என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்ற மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

கங்கை அமரனை இயக்குனராக்கிய ‘கோழி கூவுது’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share