நடிகர் சூர்யா – தீஷா பதானி நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தை பார்த்து விட்டு, ரசிகர்கள் கதறிக் கொண்டு ஓடுவதாகவும் தகவல் உள்ளது.
கங்குவா படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டது. படம் மிகவும் பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், படம் எப்படியும் ரூபாய் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று ப்ரோமோசன் நேரத்தில் பில்டப் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ கங்குவா படத்தை பார்க்க போய் மன அழுத்தம் ஏற்பட்டு depressed mood- க்கு ஆளாகி சினிமா ரசிகர்கள் கோபமானதை இப்போதுதான் பார்க்கிறேன். ஒரு திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கோபமடைந்தார்கள் என்றால், அது கங்குவா தான் என நினைக்கிறேன்.
எல்லாரும் சொல்லும் முதல் விசயம் “கத்திட்டே இருக்கானுக. படமா இது” இப்படி அசிங்க அசிங்கமா ஒரு படத்த திட்டி நான் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு மன அழுத்தம் ஏற்படுத்திருக்கானுக… மன நலம் கருதி கங்குவா படத்தை தவிர்ப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
சூர்யாவை அப்படியே பாம்பே போகச்சொல்லுங்கள். நாங்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? காசு கொடுத்து படம் பார்க்கின்றோம். பணம் என்ன சும்மா வருகிறதா? விஷுவலும் இல்லை ஒரு எஃப்க்ட்டும் இல்லை. படம் தொடங்கியதில் இருந்து சூர்யா கத்திக்கொண்டே உள்ளார் என்று படத்தை பார்த்து விட்டு ரசிகர் கத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்