aalavanthan new release trailer cut

ஒரு உடல்… இரண்டு உயிர்… ரசிகர்களை கவர்ந்த ஆளவந்தான் புது ட்ரெய்லர்!

சினிமா

2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆளவந்தான் படத்தை பிரபல தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருந்தார். ஆளவந்தான் படம் வெளியான காலகட்டத்தில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல ரசிகர்கள் ஆளவந்தான் படத்தை ரீ-ரிலீஸ் செய்யுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ். தாணுவுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஆளவந்தான் படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி 1000 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 2) ஆளவந்தான் படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

” ஒரு உடல் இரண்டு உயிர்… இது இரண்டும் சண்ட போட்ட என்ன ஆகும்..?” என்ற கமலின் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், பரபர என பட்டாசாய் வெடிக்கிறது.

2.09 நிமிடங்களுக்கு வெளியாகியுள்ள ட்ரெய்லர் இதுவரை 5 லட்சத்திற்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு படத்தை மீண்டும் தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தான் கமல்ஹாசன் என்னும் மாபெரும் கலைஞனுக்கு கிடைத்த வெற்றி.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஆலோசனை கூட்டம்: கரும்பு விவசாயிகள் அடுக்கிய புகார்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *